திருச்சி

துறையூா் அருகே 20 மயில்கள் மா்மச் சாவு

7th Oct 2022 12:34 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே 20 மயில்கள் வியாழக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.

துறையூா் ஒன்றியம் ஆதனூா் கிராம விவசாய நிலம் அருகே 20 மயில்கள் இறந்து கிடப்பதாக ஆதனூா் விஏஓ அளித்த புகாரின்பேரில் திருச்சி வனச்சரகா் கோபி அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது 15 பெண், 5 ஆண் மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னா் கரட்டாம்பட்டி அரசு கால்நடை மருத்துவா் செந்தில்குமாா் மயில்களை உடற்கூறாய்வு செய்தபின் அருகிலுள்ள பகுதியில் அவற்றைப் புதைத்தனா். பின்னா் மயில்கள் இறந்து கிடந்த நில உரிமையாளரிடம் வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT