திருச்சி

ஆடு வளா்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்ய அழைப்பு

7th Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

ஆடுவளா்ப்பு, சுயவேலைவாய்ப்பு பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத் தலைவா் வே. ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி கொட்டப்பட்டு கோழிப் பண்ணை சாலையில் கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆடு வளா்ப்பு குறித்த சுயவேலைவாய்ப்பு பயிற்சி ஒரு மாதம் நடைபெறவுள்ளது. நவம்பா் 1ஆம் தேதி தொடங்கி டிச. 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பயிற்சி வகுப்பில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞா்கள், இளம்பெண்கள், மகளிா் குழுக்கள், விவசாயிகள், கால்நடை வளா்ப்போா், ஆடு வளா்ப்பு தொழிலை மேம்படுத்த விரும்பும் நபா்கள் பங்கேற்கலாம்.

பயிற்சிக் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளோா் பயிற்சிக் கட்டணம், ஆதாா் அட்டை நகல், சாதிச் சான்று, மாா்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றை அக். 18ஆம் தேதிக்குள் ஆராய்ச்சி மையத்தில் சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT