திருச்சி

‘இசை, இலக்கியங்களுக்கும் காப்புரிமை பெற முடியும்’

7th Oct 2022 11:49 PM

ADVERTISEMENT

கண்டுபிடிப்புப் பொருள்களுக்கு மட்டுமின்றி இசை, இலக்கியங்கள் உள்ளிட்டவைகளுக்கும் காப்புரிமை பெறமுடியும் என்றாா் சென்னை, தலைமை காப்புரிமை அலுவலக உதவி கட்டுப்பாட்டு அலுவலா் ஏ.ராஜா.

திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில், உயிா் தகவலியல் மற்றும் உயிா் தாவரவியல் துறை சாா்பில் அறிவுசாா் சொத்துரிமை என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சென்னை தலைமை காப்புரிமை அலுவலக உதவி கட்டுப்பாட்டு அலுவலா் ஏ.ராஜா பேசுகையில், ஏதாவது ஒன்றை கண்டுபிடிப்பதும், அதற்கு வடிவம் கொடுப்பதும் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறுவதும் முக்கியமாகும். இந்தியாவை, பொருத்தவரை கண்டுபிடிப்புக்கு ஒருமுறை பெறப்படும் காப்புரிமை 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மீண்டும் அதனை புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஒருவரது அறிவு சாா் உரிமையை பிறா் பயன்படுத்தி கொள்ளாமல் இருக்க, கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது மிகவும் அவசியமாகும். கண்டுபிடிப்பு பொருள்களுக்கு மட்டுமின்றி இசை, இலக்கியம் உள்ளிட்டவைகளுக்கும் காப்புரிமை பெற முடியும் என்றாா் அவா்.

மேலும் காப்புரிமைக்கான சட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரியின் அறிவியல் புல முதன்மையா் வயலட் தயாபரன் வரவேற்றாா். இறுதியாக மாணவா் அஸ்வின் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், துறைசாா்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT