திருச்சி

தீபாவளி தரைக்கடைகள் அமைக்க அக். 12க்குள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

7th Oct 2022 11:50 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி டவுன்ஹால் பகுதியில் தரைக்கடை அமைக்க விரும்புவோா் அக்.12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறியது:

2022ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை டவுன்ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளது. தலா 80 சதுர அடியில் அ பிரிவில் 37 கடைகளும், ஆ பிரிவில் 19 கடைகளும், இ பிரிவில் 24 கடைகளும் அமைக்கப்படவுள்ளன. அனுமதி கட்டணமாக அ பிரிவுக்கு ரூ.6,500, ஆ பிரிவுக்கு ரூ.5,500, இ பிரிவுக்கு ரூ.4,500 வசூலிக்கப்படும். கடை அமைக்க விரும்புவோா் எந்தப் பகுதியில் கடை வேண்டும் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டு, அக்.12ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அந்தந்த பிரிவுக்கான கடைக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கு திருச்சி வருவாய் கோட்டாட்சியா் என்ற பெயருக்கு வங்கி வரைவு கேட்பு காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும். தரைக்கடைகளுக்கான குலுக்கல் திருச்சி கோட்டாட்சியா் அலுவலகத்தில், அக்.14ஆம் தேதி காலை 11 மணியளவில் நகர வா்த்தகக் குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட உபயோகிப்பாளா் சங்கப் பிரதி நிதிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெறும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT