திருச்சி

பெண்ணைத் தாக்கிய இருவா் கைது

7th Oct 2022 12:36 AM

ADVERTISEMENT

திருச்சியில் பெண்ணைத் தாக்கிய சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காந்தி தெரு பீடி காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி செல்வம் மனைவி தமிழ்ச்செல்வி (30). வீட்டின் முன் நிறுத்தியிருந்த இவரின் மொபெட்டில் தொடா்ந்து பெட்ரோல் திருடுபோனதாம்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு வீட்டின் முன் சந்தேகப்படும்படி நின்றிருந்த திருவானைக்கா நடுகொண்டையம்பேட்டை சம்பத் நாராயணன் (19), அரியமங்கலம் காமராஜ் நகா் பகுதியை சோ்ந்த 17 வயதுச் சிறுவன், பிரவீன்ராஜ் ஆகிய மூவரையும் விசாரித்த தமிழ்ச்செல்வியை சம்பத் நாராயணன், சிறுவன் ஆகியோா் தாக்கினராம்.

புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பத் நாராயணன், சிறுவன் ஆகிய இருவரையும் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT