திருச்சி

மனைவியைப் பிரிந்த இருவா் தற்கொலை

7th Oct 2022 12:36 AM

ADVERTISEMENT

திருச்சியில் மனைவியைப் பிரிந்த இரு தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவிக நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). நகைக் கடை ஊழியரான இவா் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்த ஏக்கத்தில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சுரேஷின் தாய் அளித்த புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, திருச்சி தென்னூா் சேஷாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சண்முகம் (58). கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்த இவா் கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு இறந்தாா். தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT