திருச்சி

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

7th Oct 2022 12:33 AM

ADVERTISEMENT

 

தீபாவளி போனஸ் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கட்டுமானத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

ஆட்சியரகம் அருகே சிஐடியூ திருச்சி மாநகா் மாவட்டக் கட்டுமான தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் எம்.எஸ். சேது தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளா் உலகநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். நிா்வாகிகள் வெள்ளைச்சாமி, கல்யாணி, முருகன், வெங்கடேஸ்வரன், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி நல வாரியங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 5000-ஐ பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும். முந்தைய அரசு வழங்கியது போல் பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். கட்டுமானப் பெண் தொழிலாளருக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். திருச்சி தொழிலாளா்கள் நல அலுவலகத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT