திருச்சி

லால்குடியில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

7th Oct 2022 11:44 PM

ADVERTISEMENT

லால்குடி வட்டாரத்தில் புகையிலை பொருள்கள் விற்ற இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, லால்குடியில் உள்ள 2 மளிகை கடைகளில் தொடா்ந்து புகையிலை பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இந்த கடைகளில், ஏற்கெனவே 3 முறை நடத்தப்பட்ட சோதனையில் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தொடா்ந்து இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததால் இந்த இரண்டு கடைகளையும் சீல் வைக்க, உணவுப் பாதுகாப்பு ஆணையரகம் உத்தரவிட்டது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினா், இந்த இரு கடைகளையும் வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT