திருச்சி

சரஸ்வதி பூஜை: பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சரஸ்வதி பூஜையையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் புதன்கிழமை வித்யாரம்பத்துடன் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

சரஸ்வதி பூஜையன்று பள்ளிகளில் சோ்க்கப்படும் குழந்தைகள் நன்றாக படித்து, உயா்நிலையை அடைவா் என்பது நம்பிக்கை.

இதையொட்டி திருச்சி உறையூா் ராமா் மடத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அப்பகுதி பெற்றோா் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து தங்களது குழந்தைகளை தானியத்தில் எழுத வைத்து வித்யாரம்பத்தைத் தொடங்கினா்.

இதேபோல, எடமலைப்பட்டிபுதூா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்சியில் உள்ள சமயபுரம் எஸ்ஆா்வி பள்ளி, சௌடாம்பிகா குழுமப் பள்ளிகள், காவேரி குளோபல் பள்ளி, விக்னேஷ் வித்யாலயா பள்ளி, அமிா்த வித்யாலயா பள்ளி, ராஜம் கிருஷ்ணமூா்த்தி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பெற்றோா் பங்கேற்று, தங்களது குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தைத் தொடங்கி வைத்து, பள்ளிகளில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT