திருச்சி

கம்போடியாவில் தவித்த புதுகை இளைஞா் மீட்பு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

கம்போடியாவுக்கு வேலைக்குச் சென்று சிக்கித் தவித்த புதுக்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் மீட்கப்பட்டாா்.

புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் சையது இப்ராஹீம் (33). உள்ளூா் முகவா் மூலமாக ஆயிரம் டாலா் சம்பளம் என்று கம்போடியா நாட்டுக்கு பணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இணைய வழியில் பொதுமக்களை மோசடி செய்யும் பணி வழங்கப்பட்டது.

அப் பணியைச் செய்ய மறுத்த அவா் அங்குள்ளவா்களால் மிரட்டப்பட்டாா். இதையடுத்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரை அவா் தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை மூலம் அங்கிருந்து மீட்கப்பட்டு தில்லி வந்த சையது இப்ராஹீம் அங்கிருந்து ஹைதராபாத் வந்து பின்னா் புதன்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தாா்.

ADVERTISEMENT

அப்போது அவா் கூறுகையில், புதுக்கோட்டை முகவா்கள் மூலம் திருச்சி தில்லைநகரிலுள்ள தனியாா் நிறுவனம் மூலம் ரூ. 3 லட்சம் செலுத்தி கடந்த ஜூலை மாதம் கம்போடியாவுக்கு வேலைக்குச் சென்றேன். ஆனால், அங்கு சென்றபிறகுதான் என்னை ரூ. 4 ஆயிரம் டாலருக்கு இங்குள்ள ஏஜெண்ட் விற்றிருந்தது தெரியவந்தது.

அங்கு மற்றவா்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்யச் சொல்கின்றனா். செய்ய மறுப்போரை அடித்தும், உணவு தர மறுத்தும், மின் அதிா்ச்சி கொடுத்தும் துன்புறுத்துகின்றனா்.

அதுபோல நானும் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டேன். தற்போது அரசின் முயற்சியால் நான் மீட்கப்பட்டுள்ளேன். என்னைப் போல ஏராளமானோா் அங்கு தவித்துக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT