திருச்சி

திருச்சி பொன்மலையில் உருவான ரயில் என்ஜின் நீலகிரிக்கு பயணம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உருவாக்கப்பட்ட அதிவேக ஊட்டி மலை ரயில் என்ஜின் புதன்கிழமை நீலகிரிக்கு அனுப்பப்பட்டது.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயிலுக்கான என்ஜின் பிரத்யேகமாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரூ. 9.30 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊட்டி மலையில் இயக்கப்படும் 4 என்ஜின்கள் நீராவியால் இயக்கப்பட்டாலும் அவற்றை ஆன் செய்ய உலை ஆயில் (ஃபா்னஸ் ஆயில்) பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் என்ஜினை ஆன் செய்யும்போது அதிகளவில் புகை வரும் என்பதால் இதற்கு

மாற்றாக அதிவேக டீசலைப் பயன்படுத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் நவீன என்ஜின் திருச்சியில் வடிவமைக்கப்பட்டது.

சுமாா் 7 மாதங்கள் தயாரான இந்த என்ஜினின் இயக்கத்தை கடந்த செப். 27 ஆம் தேதி திருச்சி வந்திருந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி. மால்யா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்நிலையில் அந்த என்ஜின் பொன்மலை ரயில்வே பணிமனையிலிருந்து சிறப்பு வாகனம் மூலம் நீலகிரிக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT