திருச்சி

மலேசியாவில் இருந்து முறைகேடாக வந்த இளைஞா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

மலேசியாவிலிருந்து முறைகேடாக வந்த இளைஞரை திருச்சியில் போலீஸாா் கைது செய்தனா்.

மலேசியாவில் இருந்து திங்கள்கிழமை இரவு திருச்சிக்கு விமானத்தில் வந்த விருதுநகா் மாவட்டம், தொட்டியான்குளம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் (35)

கடவுச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 5, 6 ஆம் பக்கங்களைக் காணவில்லை. இதுகுறித்து கேட்டபோது அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியுள்ளாா். இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT