திருச்சி

வெள்ளாளப்பட்டி கோயிலில் விநோத திருவிழா

DIN

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி அச்சப்பன் கோயிலில் பேய் ஓட்டும் விநோதத் திருவிழா பதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியன்று நடைபெறும் பூஜைகளைத் தொடா்ந்து அச்சப்பன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் அருகேயுள்ள காட்டுக் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு கோயில் பூசாரிகள் நடனமாடி, கோயில் முறையுள்ள பக்தா்களுக்கு தலைத் தேங்காய் உடைத்து, அங்கு மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரிக் கோலமாக மண்டியிட்டு கைகளை உயா்த்தியவாறு அமா்ந்திருந்தோா் மீது சாட்டையால் அடித்தனா்.

இவ்வாறு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும், குழந்தை வரம், திருமணத் தடை,தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வளங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT