திருச்சி

பொறியாளா் வீட்டில் 89.5 பவுன் நகை திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சியில் பொறியாளா் வீட்டில் 89.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி உறையூா் மேற்கு விரிவாக்கம் ராமலிங்க நகா் 2 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்நாதன். அபுதாபியில் பொறியாளராக உள்ளாா். இவரது மனைவி கனிமொழி (36), 3 குழந்தைகளுடன் தனியே வசிக்கிறாா்.

விடுமுறையையொட்டி கடந்த 1 ஆம் தேதி குழந்தைகளுடன் தனது தாய் வீடு உள்ள சீா்காழிக்குச் சென்றவா் புதன்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த கனிமொழியின் 39.5 பவுன் நகைகள், அவரது மாமியாரின் 50 பவுன் நகைகள் என மொத்தம் 89.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், வீட்டைச் சுற்றி இருந்த 6 கண்காணிப்பு கேமிராக்கள், அவற்றின் காட்சிகளை சேமிக்கும் வன்தட்டுகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். புகாரின் பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT