திருச்சி

துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் பொன்னூஞ்சல் விழா

5th Oct 2022 02:20 PM

ADVERTISEMENT

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி ஸ்ரீ பூதநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் ஸ்ரீ பூதநாயகி அம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் புரட்டாசி மாதம் முதல் திங்கட்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கும் திருவிழா 18 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அதன்படி இவ்வாண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி திங்கள்கிழமை நாட்டு சிறப்பு முடிந்து பூச்சொரிதலுடன் தொடங்கிய ஆலய வருடாந்திர திருவிழாவில் தினந்தோறும் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெறுவது வழக்கம். அதன்படி செப்டம்பர் 20-ஆம் தேதி செவ்வாய்கிழமை காப்பு கட்டுதலை தொடர்ந்து 27-ஆம் தேதி முதல் ஊர் முக்கியஸ்தர்களின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான பொன்னூஞ்சல் நிகழ்ச்சி நாட்டார்கள் மண்டகப்படியான நேற்று இரவு நடைபெற்றது. ஸ்ரீ பூதநாயகி அம்மன் உற்சவம் மின்னொளி அலங்கார பல்லாக்கில் பவனி வர தாரைதப்பட்டைகள் முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது. பல்லாக்கை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து சென்றனர். பின் கடைவீதி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் அருகில் அம்மன் பல்லாக்கில் இருந்து இறக்கப்பட்டு அங்கு பொன்னூஞ்சல் நிக்ழச்சி நடைபெற்றது. பெண்கள் துதி பாட, ஆண்கள் வடம் பிடித்து ஊஞ்சலை இழுத்துவிட, அம்மன் பொன்னூஞ்சலில் அமர்ந்து ஆடினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஜீவானந்து, ஊர்முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விடியற்காலை ஆலய திடலில் பொங்கல், கிடா வெட்டுதல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. விடையாற்றி மண்டகப்படி நிகழ்ச்சியுடனும் திருவிழா அக்டோபர் 6-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT

Tags : manaparai
ADVERTISEMENT
ADVERTISEMENT