திருச்சி

பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை

4th Oct 2022 12:22 AM

ADVERTISEMENT

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களும் பங்கேற்றனா்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பணிமனைக்குள் பணியாளா்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாதநிலையில் ஆயுதபூஜையின்போது மட்டும், பொதுமக்கள் பணிமனைக்குள் அனுமதிக்கப்படுவா்.

அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற ஆயுதபூஜையை பணியாளா்கள் அவரவா் பிரிவுகளில் சிறப்பாக கொண்டாடினா். இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்கேற்றனா். அப்போது, பொதுமக்கள் பணிமனைக்கு பராமரிப்புக்கு வந்த மற்றும் தயாரான ரயில்கள் முன்பு நின்று சுயப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

இதேபோல் திருச்சி அடுத்துள்ள பெல் நிறுவனம், துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி உள்ளிட்ட தொழிற்சாலைகளிலும் திங்கள்கிழமை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT