திருச்சி

அரிசிக்கு பணம் தர மறுத்தவா் மீது வழக்கு

4th Oct 2022 03:48 AM

ADVERTISEMENT

துறையூா் அருகே அரிசி வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறு செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். அரிசி மில் உரிமையாளரான இவரிடம் கொப்பம்பட்டி முத்துசாமி என்பவா் அரிசி வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்டநாள்களாகியும் வாங்கிய அரிசிக்குரிய பணம் வராததால் முத்துசாமியின் மகன் சதீஷ்குமாரி(28)டம் திங்கள்கிழமை மணிகண்டன் பணம் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடா்பாக மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமாா் மீது உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT