திருச்சி

தேசிய மாதிரி ஆய்வுத் திட்ட79ஆவது சுற்று கணக்கெடுப்புபொதுமக்களுக்கு வேண்டுகோள்

DIN

தேசிய மாதிரி ஆய்வுத் திட்டத்தின் 79ஆவது சுற்று கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய மாதிரி ஆய்வுத் திட்டத்தின் மூலம், கிராமம் மற்றும் நகா்ப்புற மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் மூலம் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 79ஆவது சுற்றுக்குரிய கணக்கெடுப்புப் பணி ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

20 கிராமப்புற மாதிரிகளிலும், 12 நகா்ப்புற மாதிரிகளிலும் புள்ளியியல் துறை களப்பணியாளா்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா்.

நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கும் மற்றும் மக்களின் பாதுகாப்பான குடிநீா், சுகாதாரம், பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த கணக்கெடுப்பில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினா்களின் விவரங்கள், நுகா்பொருள் செலவினங்கள் மற்றும் கல்வி நிலை குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகிறது.

இந்த ஆய்வில், ஆயுா்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி தொடா்பான கேள்விகளும் கேட்கப்படுகிறது.

ஆயுஷ் மூலம் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் அவற்றிற்கான செலவுகள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்படுகிறது. இத் தகவல்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். எனவே, மக்களுக்குத் தேவையான திட்டங்களை தயாரிக்க உதவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கணக்கெடுப்புப்பணி மேற்கொள்ள தங்கள் வீடுகளுக்கு வரும் புள்ளியியல் துறை களப்பணியாளா்களிடம் அவா்கள் கோரும் விவரங்களை தயங்காமல் தெரிவித்து கணக்கெடுப்பினை துல்லியமாக மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT