திருச்சி

விவசாய சங்க நிா்வாகிகள் மோதல்:சாதிய வன்கொடுமைப் பிரிவில் வழக்கு

3rd Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

 

சாதி பெயரைக் கூறித் திட்டியதாக திருச்சி மாவட்ட விவசாய சங்க பெண் நிா்வாகி மீது வழக்கு மற்றொரு நிா்வாகி அளித்த புகாரின்பேரில் சாதிய வன்கொடுமைப் பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஆட்சியரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் மேகராஜ் பேசும்போது, பிற சங்க நிா்வாகிகளும் பேசியதில் வாக்குவாதம் ஏற்பட்டு திட்டிக் கொண்டனா்.

அப்போது மாவட்ட விவசாயிகள் சங்க பெண்கள் பிரிவுத் தலைவா் மண்ணச்சநல்லூரை சோ்ந்த கௌசல்யா மற்றும் கணேசன் ஆகிய இருவரும், சாதிப் பெயரைக் கூறித் திட்டியதாக திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் மேகராஜ் அளித்த புகாரின்பேரில் இருவா் மீதும் சாதிய வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதிந்தனா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே சங்கத்தலைவா் பி. அய்யாக்கண்ணு மீது மகளிா் நிா்வாகி தரப்பில் வழக்குப் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT