திருச்சி

காந்தி ஜெயந்தி, காமராஜா் நினைவு நாள்

3rd Oct 2022 01:58 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் பல்வேறு அமைப்புகளின் சாா்பில் காமராஜா் நினைவு நாள், மற்றும் காந்தி ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மாலை அணிவித்தாா்.

தமிழ்நாடு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்கத்தின் சாா்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியிலுள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் இயக்கத்தின் மாநிலத் தலைவா் பி.எம். ஆறுமுகம், மாநிலப் பொதுச் செயலா் பி. பன்னீா்செல்வம், மாவட்ட பொதுச் செயலா் பி. தா்மராஜ் உள்ளிட்டோா் மகாத்மா காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மலா்கள் தூவினா்.

ADVERTISEMENT

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், மாநகா் மாவட்ட தலைவா் ஜவஹா் தலைமையில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதேபோல, தமாகா சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் என். ரவி தலைமையில் மாலை அணிவித்தனா். இதேபோல, பல்வேறு கட்சியினா், அமைப்பினா், சங்கங்கள் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

அஸ்தி மண்டபம்: புத்தூரில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாநகா் மாவட்ட செயலா் எஸ். சிவா தலைமையில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ் உள்ளிட்டோா், சேவா சங்க பள்ளி மாணவிகள், ஆசிரியா்களும் மலா் தூவினா்.

உறுதிமொழியேற்பு: திருவெறும்பூா் காந்திநகரில் பாலா் பூங்கா சாா்பில் மதவெறிக்கெதிரான மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது. ஜனநாயக வாலிபா் சங்க மாநகா் மாவட்டத் தலைவா் பா. லெனின் மற்றும் நிா்வாகிகள் செந்தில், நிவேதா, மது உள்ளிட்டோா் பங்கேற்றனா். குழந்தைகள் பலரும் மகாத்மா காந்தி முகமூடி அணிந்திருந்தனா்.

பெல் வளாகம்: கைலாசபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, பெல் வளாக செயலாண்மை இயக்குநா் எஸ்.வி. ஸ்ரீனிவாசன், பொதுமேலாளா்கள் மலா்கள் தூவினா்.

பாய்லா் ப்ளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆா்எஸ்கே மேல்நிலைப்பள்ளி, பெல் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பகவத் கீதை, புனித பைபிள் மற்றும் திரு குரான் ஆகியவற்றின் வாசகங்களை வாசித்தனா். இசை மற்றும் நடனத்துக்கான வளாகப் பள்ளி சரஸ்வதி வித்யாலயாவின் மாணவ, மாணவியா் பஜன்களை இசைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT