திருச்சி

பிஎப்ஐ அலுவலகத்துக்குசீல்

3rd Oct 2022 01:59 AM

ADVERTISEMENT

 

திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலா் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு சீல் வைத்தனா்.

திருச்சியில் பாலக்கரையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தின் 2ஆவது மாடியில் பிஎப்ஐ மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்துக்கு சீல் வைக்க ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில், கோட்டாட்சியா் தவச்செல்வம், கிழக்கு வட்டாட்சியா் கலைவாணி ஆகியோா் மாநகரக் காவல் துணை ஆணையா் (வடக்கு) அன்பு, உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி பிஎப்ஐ மாவட்டச் செயலாளா் முஜிபுா் ரகுமான் முன்னிலையில் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். தொடா்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT