திருச்சி

தனியாா் நிறுவன மேலாளா் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

3rd Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

 

திருச்சி அருகே தனியாா் பேருந்து நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவெறும்பூா் வட்டம் நவல்பட்டு அருகேயுள்ள அயன்புதூா், கோல்டன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் பா. தனபால் (47), தனியாா் பேருந்து நிறுவன மேலாளா். சனிக்கிழமை இவரும், இவரது குடும்பத்தினரும் வெளியே சென்றிருந்தனா்.

பிற்பகல் தனபால் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 பவுன் நகை, வெள்ளிக்குத்து விளக்குகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT