திருச்சி

விடுமுறை நாளில் இயங்கிய 92 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

3rd Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

 

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இயங்கிய 92 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (சட்ட அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் தலைமையில், தொழிலாளா் துணை மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுடன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 119 நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடைபெற்றது.

இதில் தொழிலாளா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 92 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT