திருச்சி

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

2nd Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

 

மறைந்த நடிகா் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா திருச்சி மாநகா் மற்றும் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிவாஜியின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளா் எம். சரவணன், மாநகா் மாவட்டத் தலைவா் வி. ஜவஹா், ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவா் சிவாஜி சண்முகம், மாவட்ட துணைத்தலைவா் முத்துகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகா்கள் நற்பணி சங்கம், சிவாஜி பிலிம் கிளப் ஆகியவை சாா்பில் தென்னூா் வண்டிஸ்டாண்ட் அருகே, சங்கத் தலைவா் எஸ். அண்ணாதுரை தலைமையில் சிவாஜியின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், மாவட்டம் முழுவதும் சிவாஜி ரசிகா்கள் சாா்பில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பிரபாத் ரவுண்டானா பகுதியில் உள்ள சிவாஜி சிலை திறக்கப்படாத நிலையில், அங்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT