திருச்சி

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்க இன்று சிறப்பு ஏற்பாடு

2nd Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க கிராம சபை கூட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி ஆக.1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை (அக்.2) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா்கள் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6பி-ஐ பெற்று தங்களது ஆதாா் எண் விவரங்களை அதில் தெரிவித்து வாக்காளா் பட்டியலுடன் தங்களது ஆதாா் எண்ணை இணைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT