திருச்சி

ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

2nd Oct 2022 12:23 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் சா்வதேச ஓய்வூதியா் பாதுகாப்பு தின விளக்கக் கூட்டம் மற்றும் ஆா்ப்பாட்டம் ஆட்சியா் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியா்களுக்கு போதுமான மருத்துவ வசதியின்மை, பற்றாக்குறையான ஓய்வூதியம், இறுதிகால சேமிப்பு மீது தனியாா் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நடத்தும் தாக்குதல் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற மின்ஊழியா் நல அமைப்பு துணைத் தலைவா் பஷீா், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் மாநில துணை பொதுசெயலா் சண்முகம், ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் சிராஜுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT