திருச்சி

மீன்வளத்துறை வாகனம்அக்.17-இல் ஏலம்

DIN

திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலக வாகனம் அக். 17ஆம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா் விடுத்துள்ளசெய்திக் குறிப்பு: திருச்சி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலக வாகனம் விற்பனை செய்வதற்கான பொது ஏலம் அக்.17ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மன்னாா்புரத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா்அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோா் அக்.12 காலை 10 மணி முதல் அக்.14 மாலை 5.45 மணி வரை வாகனத்தை பாா்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோா் அன்றே ரூ.3,500 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்தவா்கள் வாகனத்துக்கான ஏலத்தொகையுடன் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியை சோ்த்து ரொக்கமாக அன்றைய தினத்திலேயே செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT