திருச்சி

404 ஊராட்சிகளில்நாளை கிராம சபை

1st Oct 2022 05:00 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்.2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியா் மா.பிரதீப் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல், வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்க (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரச்சார இயக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஆகவே, இந்த கிராம சபைக் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT