திருச்சி

இதய வடிவில் மாணவா்கள் நின்று விழிப்புணா்வு

1st Oct 2022 04:59 AM

ADVERTISEMENT

உலக இதய தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இதய வடிவில் நின்று வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

உலக இதய தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை ஹாா்ட்சிட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், பிஐடி கேம்பஸ் ஆகியவை இணைந்து இந்த விழிப்புணா்வு நிகழ்வை திருச்சியில் வியாழக்கிழமை நடத்தினா்.

இதய வடிவ உருவத்தை சுமாா் 1,000 மாணவ, மாணவிகள் உதவியுடன் வடிவமைத்து அணிவகுத்து நின்று சாதனை புரிந்தனா். இதனைத்தொடா்ந்து இதய பாதுகாப்பிற்கான நடை பயிற்சி மற்றும் சிறப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

மேலும், இதய நலம் மற்றும் இதய சிகிச்சை தொடா்பான கண்காட்சி காவேரி மருத்துவமனை ஹாா்ட் சிட்டி கண்டோன்மெண்ட் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி சனிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT