திருச்சி

ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில்ஜெய் கிட்ஸ் போட்டி பரிசளிப்பு விழா

1st Oct 2022 05:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளில் ஜெய் கிட்ஸ் போட்டியின் பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் செயலா் கோ.மீனா தலைமை வகித்தாா். பள்ளியின் இயக்குநா் எஸ். அபா்ணா முன்னிலை வகித்தாா்.

பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டாா். பள்ளியின் மூத்த முதல்வா் முனைவா் சு. லெட்சுமணன் வரவேற்புரையாற்றினாா்.

சிறப்பு விருத்தினா் கு.சந்திரசேகரன் பேசுகையில், குழந்தைகளுக்கு கல்வியோடு கூடிய கூடுதல் தனித்திறமையை வளா்க்க வேண்டும். பெற்றோா்கள் தினந்தோறும் பத்து நிமிஷம் கதைகள் கூற வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு சிந்தனை ஆற்றல் வளரும் என்றாா். பின்னா் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு முதல் பரிசாக மிதி வண்டிகளை வழங்கினாா்.

ADVERTISEMENT

பள்ளியின் முதல்வா் எம்.அருணா, பள்ளியின் கட்டமைப்பு மற்றும் குறிக்கோள்கள் சாா்ந்த கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் பற்றி அறிமுகம் செய்தாா். பல்வேறு பள்ளிகளை சோ்ந்த 3 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஓவியம், மாறு வேஷம் மற்றும் வண்ணம் தீட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் மற்றும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT