திருச்சி

பாலியல் தொந்தரவுஅளித்தவருக்கு5 ஆண்டுகள் சிறை

1st Oct 2022 05:00 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த பூசாரிப்பட்டியில் 4 வயதுப் பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த ஆண்டவா்கோயில் பூசாரிப்பட்டியில் வசிக்கும் கூலி தொழிலாளியின் 4 வயது மகள் கடந்த 2020 மாா்ச் 5-ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடியபோது, அருகில் வசித்த மாமுண்டி மகன் மாரியப்பன் (48) குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தாா்.

குழந்தையின் தாய் அளித்த புகாரின்பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் மாரியப்பனை கைது செய்த மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த ஷெசன்ஸ் நீதிபதி என்.எஸ். ஸ்ரீவஸ்தன் குற்றவாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT