திருச்சி

துறையூா் நகா்மன்றக் கூட்டம்

1st Oct 2022 04:51 AM

ADVERTISEMENT

துறையூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் செல்வராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ந. முரளி முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா், பொறியாளா் தாண்டவமூா்த்தி, மேலாளா் முருகராஜ், சுகாதார அலுவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் நகா்மன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனா்.

கூட்டத்தில் நகருக்குள் உள்ள இறைச்சிக் கடையை நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வைத்தல், உரிமம் இல்லாத கடை மீது நடவடிக்கை எடுத்தல், காவிரி குடிநீா்ப் பற்றாக்குறை பிரச்னை, நகராட்சிக்கென தனியாக நில அளவையரை நியமிக்க ஆட்சியருக்கு பரிந்துரைத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை நகா்மன்ற உறுப்பினா்கள் விவாதித்தனா். நகா்மன்ற அனுமதி கோரிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினா்கள் காா்த்திகேயன், பாபு, செந்தில்குமாா், அமைதிபாலு, சந்திரா, புவனேஸ்வரி, கெளதமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT