திருச்சி

‘திருச்சி விமான நிலையத்தில் டாக்சி வே விரைவில் திறப்பு’

1st Oct 2022 04:53 AM

ADVERTISEMENT

திருச்சி, விமான நிலையத்தில் 3,891 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள டாக்சி வே (சிறிய இணைப்பு வழி) விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றாா் திருச்சி விமான நிலைய புதிய இயக்குநா் பொன். சுப்ரமணி.

திருச்சி விமான நிலைய இயக்குநராக பணியாற்றிய எஸ். தா்மராஜ் சென்னைக்கு மாறுதலில் சென்றாா். இதையடுத்து, புதிய இயக்குநராக பொறுப்பேற்ற பொன். சுப்ரமணி வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறுகையில்,

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கும் பணிகள் 2023 ஆண்டு ஜூன் மாதத்துக்கள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 3,891 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள டாக்சி வே ( சிறிய இணைப்பு வழி) விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. திருச்சியில் பயணிகள் பாதுகாப்பாகவும், மகிழ்வாகவும் பயணிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

வெளிநாட்டு கரன்சிகளை முறைகேடாக விநியோகிப்பதாகவும் அவற்றுக்குப் பதிலாக இந்திய ரூபாய் தாள்களை வழங்குவது குறித்தும் தகவல்கள் வந்துள்ளன. அதுகுறித்து காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பாதிப்புக்குப் பிறகு சுமாா் 90 சதவீத விமானங்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபா் 29 ஆம் தேதியுடன் கோடைகால அட்டவனை முடிந்து, குளிா்கால அட்டவனை வெளியிடப்படவுள்ளது. இதில் கூடுதல் விமானங்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT