திருச்சி

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாள் தரிசனம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

1st Oct 2022 04:57 AM

ADVERTISEMENT

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசன நிகழ்வை தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளை தரிசனம் செய்யும் வகையில், திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.30) தொடங்கி அக்.9-ஆம் தேதி வரை இந்த தரிசன நிகழ்வு நடைபெறுகிறது.

தொடக்க நிகழ்வில், தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு கலந்து கொண்டு தரிசன நிகழ்வை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இதில், மாநகராட்சி மேயா் அன்பழகன், தொழிலதிபா் கே.என்.அருண் நேரு, சுந்தா் பட்டா் மற்றும் விழா ஏற்பாட்டாளா்கள், பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். திவ்யதேச பெருமாளின் தரிசனத்தை கண்டுகளிக்க முன்பதிவு ஏற்பாடுகளும் உள்ளன.

ADVERTISEMENT

முதல்நாள் நிகழ்வில் காலை 8.30 மணிக்கு வேளுக்குடி உ. வே .கிருஷ்ணன் சொற்பொழிவு நடைபெற்றறது. மாலை 6.30 மணி அளவில் திவ்ய தேசங்களின் பெருமை எனும் தலைப்பில் ஸ்ரீ உ. வே கருணாகரச்சாரியாா் சுவாமி சொற்பொழிவு ஆற்றினாா்.

சனிக்கிழமை (அக்.1) மாலை 6.30 மணிக்கு பேராசிரியா் விஜய சுந்தரியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. அக். 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கண்ணன் நம் தோழன் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளா் கவிதா ஜவஹா் பேசுகிறாா்.

அக்டோபா் 3ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6.30 மணிக்கு கிருஷ்ணன் தூது எனும் தலைப்பில் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் சொற்பொழிவு ஆற்றுகிறாா். அக். 4ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீமதி சுசித்ரா, ஹரி கதை சொற்பொழிவும், 5ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் இன்னிசை நிகழ்வு நடைபெறுகிறது. 6ஆம் தேதி (வியாழக்கிழமை) கவிஞா் மணிகண்டன், ராமன் காட்டிய வழி எனும் தலைப்பிலும், 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலை எழிலரசியின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும். 8ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஆழ்வாா்களும், நவராத்திரியும் என்ற தலைப்பில் முனைவா் உ.வே. வேங்கடேஷ் சொற்பொழிவாற்றுகிறாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT