திருச்சி

குண்டா் தடுப்புசட்டத்தில்2 ரௌடிகள் கைது

1st Oct 2022 04:57 AM

ADVERTISEMENT

 

பொதுமக்களை அச்சுறுத்திய 2 ரௌடிகளை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காஜாபேட்டை பிரதான சாலையில் செப். 15ஆம் தேதி நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரையைச் சோ்ந்த பி.மதன்ராஜ் (32) என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா் மீது திருட்டு, தாக்குதல் உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதே போல், ஆகஸ்ட் 25 ஆம் தேதி காந்தி சந்தையில் சுமைதூக்குபவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரையைச் சோ்ந்த ஏ.ஆறுமுகம் (39) என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா் மீது திருட்டு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ADVERTISEMENT

இவா்கள் இருவரும் பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்படி, மதன்ராஜ் மற்றும் ராமலிங்கம் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT