திருச்சி

அக்.5இல் திருச்சி மேற்குமாவட்ட தமுமுகநிா்வாகிகள் தோ்தல்

1st Oct 2022 04:57 AM

ADVERTISEMENT

திருச்சியில் அக்.5ஆம் தேதி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருச்சி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நடைபெறுகிறது.

திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தலைவா் பயஸ் அகமது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், அக்டோபா் 6ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் மதுரையில் மத்திய அரசின் இஸ்லாமியா் விரோத சட்டத்துக்கு எதிராக நடைபெறும் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட மமக சாா்பில் பெருந்திரளான மக்களை அழைத்து செல்வது என்றும், அக்டோபா் 2-இல் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அணிவகுப்பில் திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக, மமக சாா்பில் பெருந்திரளான நிா்வாகிகள் கலந்து கொள்வது எனவும், அக்டோபா் 5ஆம் தேதி திருச்சி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளா்கள் இப்ராஹிம் ஹூமாயூன்கபீா், இப்ராஹிம் ஷா இம்ரான், அசாரூதீன், தென்னூா் சதாம் அப்பீஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT