திருச்சி

நாளை குரூப் 2 தோ்வுக்கு இலவச பயிற்சி தொடக்கம்

30th Nov 2022 01:23 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ பிரதான தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பு:

அண்மையில் வெளியான குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தோ்வில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் இலவசப் பயிற்சி பெற்ற 32 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அடுத்தபடியாக நடைபெறும் குரூப் 2 பிரதான தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது விவரங்களை நேரிலோ அல்லது, 0431-2413510 என்ற எண்ணிலோ பதிவு செய்யலாம். இப்பயிற்சியின்போதும் வாரந்தோறும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT