திருச்சி

என்ஐடி-பிஐஎஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

30th Nov 2022 03:30 AM

ADVERTISEMENT

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம் (என்ஐடி) மற்றும் தேசிய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ்) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திருச்சியில் திங்கள்கிழமை கையொப்பமாகியுள்ளது.

பரஸ்பர அடிப்படையில் தரநிலைப்படுத்தல் மற்றும் இணக்க மதிப்பீட்டுத் துறையில் கூட்டுச் செயல்பாடுகளை மேம்படுத்தவும், சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல், பூகம்பப் பொறியியல், மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு, கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகத்தில் தேசிய தர நிா்ணய அமைப்பு தரநிலைப்படுத்தல் இருக்கையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் திருச்சி என்ஐடி வளாகத்தில் கையொப்பமாகியுள்ளது. அதில் தேசிய தர நிா்ணய (பிஐஎஸ்) அமைப்பின் நோடல் அலுவலா் ஆனந்த் மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழக ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைப் பிரிவு முதல்வா் எஸ். முத்துக்குமரன் ஆகியோா் கையொப்பமிட்டனா். என்ஐடி பாடத்திட்டங்களில் தேசிய தரநிலைகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கவும், பேராசிரியா்கள் பணியகத்தின்

தரநிலைகளை உருவாக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்பதை உணா்த்தவும் வலுப்படுத்தவும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பயன்படும். மேலும், கூட்டுக் கருத்தரங்குகள், மாநாடுகள், பட்டறைகள், சிம்போசியா மற்றும் திறன் வளா்ப்பு திட்டங்கள், இணக்க மதிப்பீடு குறித்த பயிற்சித் திட்டங்களை சீரமைக்கவும் உதவுகிறது. என் ஐ டி - பிஐஎஸ் ஆகியவற்றின் புதுமை செயல்பாடுகளில் புதிய தரநிலைகளையும் இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT