திருச்சி

சென்னை திரும்பிய முதல்வா்

30th Nov 2022 01:23 AM

ADVERTISEMENT

திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை திரும்பினாா்.

முன்னதாக, திங்கள்கிழமை திருச்சியை அடுத்த காட்டூா் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடா் பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் வானவில் மன்றத்தையும், ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ என்ற பள்ளி மாணவா்களுக்கான புதிய திட்டத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பெரம்பலூா் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டி, அரியலூா் மாவட்டம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பாா்வையிட்டு, செவ்வாய்க்கிழமை அரியலூா் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவிலும் பங்கேற்றாா்.

பின்னா், பிற்பகல் 12.32-க்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல்வரை ஆ. ராசா எம்.பி, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகர மேயா் அன்பழகன் உள்ளிட்டோா் வழியனுப்பினா். முதல்வருடன் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT