திருச்சி

தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் ஒத்திவைப்பு

30th Nov 2022 01:20 AM

ADVERTISEMENT

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தரைக்கடை வியாபாரிகளின் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியின் விற்பனைக் குழு அமைக்காமல் தரைக்கடை வியாபாரிகளை அகற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தரைக்கடை வியாபாரிகள் சாா்பில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோரிக்கைகள் தொடா்பாக புதன்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு மாநகரக் காவல்துறையினா் ஏற்பாடு செய்துள்ளனா். இதுதொடா்பாக, அமா்வுநீதிமன்ற காவல்நிலைய ஆய்வாளா் எழுத்துப் பூா்வமாக உறுதியளித்துள்ளாா். எனவே, முற்றுகைப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், அமைதிப்பேச்சுவாா்த்தையில் தங்களது கோரிக்கைகளை மாநகராட்சிக்கு வலியுறுத்த வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும், முன்னெச்சரிக்கையாக மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காலை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT