திருச்சி

தில்லைநகா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

30th Nov 2022 01:23 AM

ADVERTISEMENT

திருச்சி தில்லைநகா் பகுதியில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் தில்லைநகா் வடக்கு விஸ்தரிப்பு, தில்லைநகா் 1, 2, 3, 4, 5 ஆவது குறுக்குத் தெருக்கள், தில்லைநகா் 1 மற்றும் 2 ஆவது குறுக்குத்தெரு மேற்குப் பகுதிகள், தேவா் காலனி, அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.

மின்தடை புகாா்கள் மற்றும் தகவல்களுக்கு 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடா்பு கொள்ளவும். மின்வாரிய தென்னூா் செயற்பொறியாளா் பா. சண்முகசுந்தரம் இதைத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT