திருச்சி

தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

29th Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

தமிழக அரசு உயிா்ம வேளாண்மை கொள்கையை அறிவிக்கக் கோரி தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கத்தின் சாா்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக உழவா் முன்னணியின் ஆலோசகா் கி.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

உயிா்ம வேளாண்மை கொள்கையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தை இயற்கையுடன் இயைந்த வேளாண்மை மாநிலமாக மாற்றிட உடனடியாக சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்மை உழவா் இயக்கம் பாமயன், கால்நடை மற்றும் மூலிகை மருத்துவா் புண்ணியமூா்த்தி, தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் ரமேஷ் கருப்பையா, பேராசிரியா் கோச்சடை, சுயாட்சி இந்தியா தமிழக ஒருங்கிணைப்பாளா் கே.பாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா். நிறைவில் தமிழக உழவா் முன்னணியின் பொதுச்செயலாளா் க. முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT