திருச்சி

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 533 மனு

29th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 533 மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலரும், ஆவின் பொதுமேலாளருமான ஆ. பெருமாள் தலைமை வகித்தாா். விவசாயிகள் தரப்பில் ஏராளமான மனுக்கள் வந்திருந்தன. நிலம் தொடா்பான கோரிக்கையுடன் 92 மனு, குடும்ப அட்டை கோரி 52 மனு, உதவித் தொகை கோரி 68 மனு, வேலைவாய்ப்பு கோரி 60 மனு, அடிப்படை வசதிகள் கோரி 70 மனு, 30 புகாா் மனுக்கள், கடன் மற்றும் நலவாரியத் திட்டம் கோரி 32 மனு, இதர மனுக்கள் என மொத்தம் 533 மனுக்கள் வந்திருந்தன. இந்த மனுக்களை அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT