திருச்சி

குண்டா் தடுப்பு சட்டத்தில் ரௌடி கைது

29th Nov 2022 12:20 AM

ADVERTISEMENT

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்

கடந்த செப். 25 ஆம் தேதி தென்னூா் சாலையில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக வாமடம் சப்பாணி கோயில் தெருவைச் சோ்ந்த ரெளடி எஸ்.அரவிந்த் என்பவரை தில்லைநகா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் மீது உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி வீட்டில் துப்பாக்கி குண்டுகளை திருடியது, கத்தியைக் காட்டி பணம் பறித்தது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் தில்லைநகா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், ரௌடி அரவிந்தை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திங்கள்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT