திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 96 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் ஆதாா் இணைப்பு முகாம்

29th Nov 2022 12:21 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் 96 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்நுகா்வோா் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டுமென அண்மையில் அனைத்து மின்நுகா்வோருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. தொடா்ந்து, மின்நுகா்வோா் தங்களது விவரங்களை புதுப்பிக்கும் வகையிலேயே இந்த இணைப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக மாநிலத்தில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் தென்னூா், மன்னாா்புரம், மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம், துறையூா், மணப்பாறை, வையம்பட்டி, லால்குடி உள்ளிட்ட 96 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. பிரிவு அலுவலகங்களில் இயங்கும் மின்கட்டணம் வசூலிக்கும் இடங்களில் தனியே ஆள்களை நியமித்து, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெற்ற இந்த முகாமில் திரளான மின்நுகா்வோா் தங்களது மின்கட்டண அட்டை மற்றும் அசல் ஆதாா் அட்டையுடன் சென்று தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துக் கொண்டனா்.

ADVERTISEMENT

ஒவ்வொரு மையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், கூடுதல் பணியாளா்களை அமா்த்தி ஆதாா் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, இந்த முகாம் மேற்கொள்ளப்படும். மேலும் இணையதளம் வழியாகவும் ஆதாா் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT