திருச்சி

வீட்டுமனை கோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு

29th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

வீடு இல்லாத தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா அல்லது குடிசை மாற்று வாரிய வீடு வழங்கக் கோரி ஏராளமான பெண்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட திம்மராயசமுத்திரம், புதுக்காலனி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளிக்க வந்திருந்தனா். அவா்கள் கூறியது: அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும் என்றசூழலில் உள்ளோம். ஆண்டுதோறும் உயா்த்தப்படும் வீட்டு வாடகையால் வருவாயின் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே, குடிசமை மாற்று வாரியத்தின் மூலம் ஒதுக்கப்படும் இலவச வீடுகளில் வீடு ஒதுக்கித்தர வேண்டும். இல்லையெனில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றனா்.

இதேபோல, மண்ணச்சநல்லூா், திருவெறும்பூா், அரியமங்கலம், பாலக்கரை, மணிகண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT