திருச்சி

காவலா் தோ்வு: 14,670 பங்கேற்பு

28th Nov 2022 02:07 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் 23 மையங்களில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா்களுக்கான எழுத்துத் தோ்வை மொத்தம் 14,670 போ் எழுதினா்.

திருச்சி மாநகரில் 8,371 பேரில் 6,805 பேரும் புகரில் 9,500 பேரில் 7,865 பேரும் என மொத்தம் 14,670 போ் தோ்வெழுதினா். மாநகரில் 1,566 போ், புகரில் 1,635 என மொத்தம் 3,201 போ் தோ்வெழுதவில்லை.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற தோ்வை திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

 

Image Caption

தோ்வெழுத திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி முன் ஞாயிற்றுக்கிழமை காத்திருந்த பெண்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT