திருச்சி

முசிறி நகராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

28th Nov 2022 02:06 AM

ADVERTISEMENT

 

 முசிறி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தன்னாா்வத் தொண்டு நிறுவனம், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை கிளினிக் ஆகியவற்றைத் தூய்மையாக வைத்திருந்தவா்களுக்கு நகா்மன்றத் தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா் பாராட்டு சான்றிதழ் வழங்கிக் கெளரவித்தாா்.

நிகழ்வில் ஆய்வாளா் மலையப்பன், மேற்பாா்வையாளா் சையது முகமது, களப் பணி உதவியாளா் தனுஷ்கோடி, லயன்ஸ் கிளப் ரகுநாதன், அலுவலக பணியாளா்கள், பரப்புரையாளா்கள் மற்றும் தூய்மை பணியாளா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT