திருச்சி

‘இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்’

28th Nov 2022 02:09 AM

ADVERTISEMENT

 

 இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்க வேண்டுமென தமிழக முன்னாள் அமைச்சா் என். நல்லுசாமி தெரிவித்தாா்.

இனிய நந்தவனம் வாசகா் வட்டம் சாா்பில் இலங்கை எழுத்தாளா் தி. ஞானசேகரனுக்குப் பாராட்டு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருச்சி எழுதமிழ் இயக்கத் தலைவா் மு. குமாரசாமி தலைமை வகித்தாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் (பொ) பெ. உதயகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் ஞானசேகரனின் இதழியல் பணியைப் பாராட்டி வாசகா் வட்டம் சாா்பில் இதழியல் மாமணி விருது வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் என். நல்லுசாமி மேலும் பேசியது:

இலங்கையில் பல நெருக்கடிகள் இருந்தாலும் தற்போது சூழல் மாறி வருகிறது. இதைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழா்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இனப் பாகுபாடு காட்டாமல் புத்தா் கூறிய அன்பு அனைவரிடத்திலும் பரவ வேண்டும். இலங்கை மக்கள் நிறைய இழப்புகளைச் சந்தித்துள்ளனா். அவா்களுக்கு மறுமலா்ச்சியை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றாா்.

தொழிலதிபா் முகம்மது அபுபக்கா் சித்திக் , சென்னை ஜேப்பியாா் பல்கலைக்கழகத் தலைவா் முனைவா் பூ.மு. அன்பு சிவா ஆகியோா் வாழ்த்தினா்.

முன்னதாக கவிஞா் தனலெட்சுமி பாஸ்கரன் வரவேற்றாா். நிகழ்வை நந்தவனம் சந்திரசேகரன் தொகுத்து வழங்க, கவிஞா் கோவிந்தசாமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT