திருச்சி

சுகாதாரத்துறை நூற்றாண்டு ஜோதிக்கு திருச்சியில் வரவேற்பு

DIN

திருச்சிக்கு சனிக்கிழமை வந்த பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா ஜோதியை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வரவேற்றாா்.

தமிழகத்தில் பொதுசுகாதாரத் துறை தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக டிசம்பா் மாதத்தில் சா்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த சா்வதேச சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நூற்றாண்டு ஜோதி சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணித்து மாமல்லபுரத்தை டிசம்பா் 5ஆம் தேதி வந்தடைய உள்ளது. இந்த ஜோதி திருச்சிக்கு சனிக்கிழமை வந்தது.

இந்த ஜோதிக்கு மாவட்ட சுகாதாரத்துறையினா் வரவேற்பு அளித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் வழங்கி வாழ்த்து பெற்றனா். இந்த நூற்றாண்டு ஜோதி தமிழகம் முழுவதும் உள்ள 42 சுகாதார மாவட்டங்களிலும் 3,315 கி.மீ. தொலைவு சுற்றுபயணம் செய்து நூற்றாண்டு விழா குறித்தும், மாநாடு குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளது. திருச்சியில் நடைபெற்ற வரவேற்பு விழாவில், சுகாதாரத்துறை துணை இயக்குநா் சுப்பிரமணியன் மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT